மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.;
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்து 123 அடியாக அதிகரித்தது. வைகை அணயின் நீர்மட்டம் 31 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.