"நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.;
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், நோயாளிகளை அழைத்து வர கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 2 ஆயிரம் வீடுகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக உமா மகேஸ்வரி தெரிவித்தார்.