சாத்தான்குளம் சம்பவம் - கோவில்பட்டி அரசு மருத்துவர்களிடம் விசாரணை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.;
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்குள்ள, மருத்துவர்கள் வெங்கடேசன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரிடம், தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.