கொரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியர் - ஆட்சியர் அலுவலகத்தில் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட, விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.;
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட, விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கவியரசின் உருவப் படத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் சந்திரசேகர சாகமூனி உள்ளிட்டோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர். இதனிடையே, வட்டாட்சியர் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, வழிவகை செய்ய வேண்டும் என வருவாய்த் துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.