சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 19 பேர் உயிரிழப்பு
சென்னையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர்.;
சென்னையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர், ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு19 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.