தேக்கு மரம் கடத்தல் - 10 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டம் தட்டக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட பர்கூர் வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து மேற்கொண்டனர்,.

Update: 2020-07-08 02:53 GMT
ஈரோடு மாவட்டம் தட்டக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட பர்கூர் வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து மேற்கொண்டனர்,. அப்போது  அங்கு சிதைவுற்ற தேக்கு மரத்தை வெட்டி கொண்டு இருந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர்,. அப்போது, குட்டையூர் கிராமத்தை சேர்ந்த பந்தையத்தம்படி என்பவர் தேக்கு மரத்தை வெட்டி சட்டங்களாக பதுக்கி வைப்பது தெரியவந்தது,. இதையடுத்து மாவட்ட வனஅலுவர் உத்தரவின்படி பந்தையத்தம்படி  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில் காளை இறப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது, மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகளில்  இந்த கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பின்னர் தான் ஜல்லிகட்டு போட்டிகள் தொடங்கும்,. தீடீரென ஜல்லிகட்டு காளை இறப்பால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். இறந்த கோவில் காளையின் உடல், கோவில் வளாகத்திலே நல்லடக்கம் செய்யப்பட்டது.

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் நோக்கி சென்ற லாரியும், வெங்கல் கிராமத்தில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது,. அதில் காரில் பயணித்த தீனதயாளன் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் - உரிய அனுமதியின்றி கொண்டு சென்றதால் நடவடிக்கை


கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி சத்தியமங்கலம் வழியாக கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், கிரானைட் கற்களை ஏற்றி சென்ற 3 லாரிகளை மடக்கி பிடித்தனர்,. லாரி ஓட்டுனர்களிடம் உரிய அனுமதி சீட்டுகள் இல்லாததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றர்.

மீனவர்களுக்குள் மோதல் - தீர்வு காண பொதுக்கூட்டம்


சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவர்களை திருமுல்லைவாசல் மீனவர்கள் தாக்கி சிறைபிடித்ததால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து பிரச்சினைக்கு தீர்வுகணும் வகையில், 22 மீனகிராம பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆர்.டி.ஓ மற்றும் ஏ.டி.எஸ்.பி க்கள் கலந்துகொண்டனர்,. அப்போது அரசால் தடை செய்ப்பட்ட சீன இஞ்சின் மற்றும் வலைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது, மேலும் தாக்குதல் நடத்தியவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

தக்காளி செடிகளை வேரோடு பிடுங்கிய மர்மநபர்கள் -  செடிகள் காய்ந்ததால் விவசாயி வேதனை


ஒசூர் அருகேயுள்ள தாசனபுரம் கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவரின் தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி செடிகளை மர்மநபர்கள் வேரோடு பிடுங்கியுள்ளனர். அறுவடைக்கு தயரான நேரத்தில் செடிகள் காய்ந்து போனதால் அவர் மிகுந்த வேதனையடைந்துள்ளார். செடிகளை பிடுங்கிய மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் பேரிகை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்