சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 26 பேர் உயிரிழப்பு

கொரோனா சிகிச்சை பெறுவோரின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-05 08:41 GMT
கோடம்பாக்கத்தில், 2 ஆயிரத்து 737 பேரும்,  அண்ணா நகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 398 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 222 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 320 பேரும், தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 227 பேரும், திருவிக  மண்டலத்தில் ஆயிரத்து 775 பேரும் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே சமயம், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவிற்கான,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 11 பேரும், அரசு ஓமந்தூரார் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்