முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞர்களுடன் கலந்துரையாடும் டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்'-இன் (Vibe with MKS) டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி, இளம் விளையாட்டு வீரர்களுடன் தாம் உரையாடிய புரோமோ (Promo) வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இளம் தலைமுறையினர் பேச ஆரம்பித்தால், அந்த உரையாடல் சுவாரசியமாக மாறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.