"சம்பந்தப்பட்டவர்களை சத்தியமா விடவே கூடாது" - சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்களை சத்தியமா விடவே கூடாது என ரஜினி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.;

Update: 2020-07-01 08:30 GMT
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்களை சத்தியமா விடவே கூடாது என ரஜினி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தந்தை, மகனை சித்ரவதை செய்து கொன்றதை மனித இனமே எதிர்ப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்த கொண்ட முறை அதிர்ச்சி அளிப்பதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினி தனது ஆவேசத்தை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்