சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை 22 பேர் பலி
கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதைப்போல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.