மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி, தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.;

Update: 2020-06-24 09:07 GMT
அரியலூர், திருப்பூரை தவிர திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அறிவுரை வழங்கினார். பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்