கொரோனா பரிசோதனை - மணிக்கணக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளை தேனி மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்ல உபகரணம் வாங்க வேண்டியுள்ளதாக கூறி தலா ஒரு நபருக்கு 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கர்ப்பிணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.