Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-12-08 00:58 GMT

 வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது... மக்களவையில் பிரதமர் மோடியும், மாநிலங்களவையில் அமித்ஷாவும் விவாதத்தை தொடங்கி வைக்கின்றனர்...

மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திமுக ஆட்சியில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாளை மறுநாளுக்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது... விமான நேர அட்டவணைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது...

விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பயணிகளுக்கு 610 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது... விமான நிலையங்களில் சிக்கிய மூவாயிரம் லக்கேஜுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...

தமிழகத்தில் 6.40 கோடி SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.... இதுவரை 99 சதவீத படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...

புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்திற்கு வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... 5 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...

தவெகவுக்கு மிக விரைவில் சின்னம் கிடைக்கப் போவதாகவும், அது என்னவென்று தனக்குத் தெரியும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்...கோபிசெட்டிபாளையத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தவெகவின் சின்னத்தை பார்த்து நாடே வியக்கும் என்று கூறினார்..

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்....போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம்... கும்பாபிஷேகத்தையொட்டி மின்னொளியில் கோயில் வளாகம் ஜொலித்தது..

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குகிறது... இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது...

ஒகினாவா தீவுக்கு அருகே ஜப்பானிய ராணுவ விமானங்களை சீனப் போர் விமானங்கள் தாக்க முயன்றதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது...சீனாவின் ஜே-15 போர் விமானம், ரேடார் மூலம் தாக்க முயன்றதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது...

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த லாண்டோ நோரிஸ் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்... ஃபார்முலா ஒன் ஜாம்பவான் வெர்ஸ்டாபனை பின்னுக்கு தள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் 26 வயதான லாண்டோ மோரிஸ்..

Tags:    

மேலும் செய்திகள்