ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி போராட்டம்

ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-21 10:25 GMT
நெல்லை

நெல்லையில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரியும், 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும் ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

இதேபோல் விருதுநகரிலும், ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரியும், நிவாரணம் வேண்டியும் ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக இடைவெளி விட்டு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். 

திருச்செந்தூர்

திருச்செந்தூரில், ஆட்டோ ஓட்டுநர்கள் 30க்கும் மேற்பட்டோர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி, தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது மக்களின் வசதிக்காக சமூக இடைவெளியுடன் ஆட்டோ இயக்க அனுமதி வழங்குமாறும் மனுவில் கேட்டு கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்