பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள் உரிமை பறிப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள உத்தரவு - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள் உரிமை பறிப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்றார்.
தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று ஆண்டிற்கு இடைக்கால நீக்கம் செய்வது உச்சபட்ச கொடுமை என விமர்சித்துள்ள ஸ்டாலின்,
கொரோனா நெருக்கடி சூழலில், தொழிலாளர் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க தேவையில்லை என விலக்கு அளிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும்
தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தொழிலாளர் விரோத முடிவினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்ட ஸ்டாலின்,
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சிறப்பு அறிவுரையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.