தாமதமாகும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி - காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் வியாபாரிகள்

திருமழிசையில், தற்காலிக காய்கறி சந்தை சந்தை அமைக்கும் பணி முடிவடையாததால், மொத்த வியாபாரிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.;

Update: 2020-05-08 09:13 GMT
சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முதல் தற்காலிக சந்தை இயங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பணிகள் முடிவடையாததால், ஓரிரு நாட்களில் தற்காலிக சந்தை இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிக சந்தை இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் காய்கறிகளை அதிக அளவில் கொள்முதல் செய்துள்ளதாக கூறிய மொத்த வியாபாரிகள், அதனை எப்படி விற்பனை செய்வது என தெரியவில்லை கவலை தெரிவித்துள்ளனர். ஒரு சில வியாபாரிகள் சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி, காய்கறிகளை அப்படியே விற்பனை செய்து வருகின்றனர். சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை விற்பனை கூடாது என போலீசார்  அறிவுறுத்தி வருவதால் தற்காலிக சந்தையை விரைவாக திறக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்