கடலூரில் கோயம்பேட்டில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா

சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் கடலூர் பகுதிக்கு வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-05-02 05:08 GMT
சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் கடலூர் பகுதிக்கு வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கடலூருக்கு வந்த 427 பேரை தடுத்த போலீசார், கடலூர், விருத்தாசலம், வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். 27 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், ஏழு பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 400 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்