கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு - வியாபாரிகள், ஊழியர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2020-05-01 09:43 GMT
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் , கோயம்பேடு சந்தையில்  மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிபுரிபவர்கள் மற்றும்  வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்ற காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்  அங்கு பணிபுரியும் காவலர்களை சந்தித்து கொரோனா நோய் தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்