தமிழக, ஆந்திர எல்லையில் கூடுதல் கண்காணிப்பு
தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சாலைகளில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில், வேலூர் மாவட்ட நிர்வாகம் தடுப்பு சுவரை கட்டியது;
தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சாலைகளில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில், வேலூர் மாவட்ட நிர்வாகம் தடுப்பு சுவரை கட்டியது. பின்னர் எதிர்ப்புகளுக்கிடையே தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது. இந்நிலையில் இரு மாநில எல்லை வழியாக வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளித்தப் பின்னரே, அனுமதி வழங்கப்படுகிறது. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பாடுத்தப்பட்டப் பிறகே அத்தியாவசிய பணிகளுக்காக வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திலும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் நபர்கள், அனுமதிக்கப்படுகிறார்கள்.