Chennai | பைக்கில் சென்ற தம்பதி மீது மோதிய லாரி - துடிதுடித்து பிரிந்த உயிர்.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-12-20 03:25 GMT

சென்னை முகப்பேரில் பைக்கில் சென்ற கணவன், மனைவி மீது கழிவு நீர் லாரி மோதியதில் மனைவி உயிரிழந்தார். லாரி மோதியதில் கிருஷ்ணன், சுமித்ரா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமித்ரா உயிரிழந்தார். கிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்