"உணவுக்காக ஏங்கும் கூலி தொழிலாளிகள் : பசியால் வாடும் தங்களுக்கு உதவ கோரிக்கை"

சென்னை, ஆதம்பாக்கம் ஒடைத்தெரு, சுந்தர மூர்த்தி தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கட்டட, பிளம்பிங், வெள்ளையடித்தல் தொழில் என செய்யும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

Update: 2020-04-27 12:25 GMT
சென்னை, ஆதம்பாக்கம் ஒடைத்தெரு, சுந்தர மூர்த்தி தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கட்டட, பிளம்பிங், வெள்ளையடித்தல் தொழில் என செய்யும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அவர்கள், கடந்த ஒரு மாதமாக கையில் இருந்த பணத்தை  கொண்டு சமாளித்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் அவர்கள் சாப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு யாரும் நிவாரணம் வழங்காத நிலையில் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பசியால் வாடும் தங்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்