சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநில, பிறமாவட்ட நபர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதி - மாநகராட்சி ஆணையர்

சேலம் மாநகரத்திற்குள் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் பரிசோதனைக்குட்படுத்தி முடிவு வந்த பின்னர் தான் அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2020-04-27 11:57 GMT
சேலம் மாநகரத்திற்குள் இன்று  முதல் வெளிமாநிலங்கள் பிற மாவட்டங்களிலிருந்து வருவோர், கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி, முடிவு வந்த பின்னர் தான் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என  மாநகராட்சி ஆணையர் சதீஷ்  உத்தரவிட்டுள்ளார்.  சேலம் மாநகரை வசிப்பிடமாக கொண்டு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து மீண்டும் சேலம் வருவோருக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து,  கருப்பூர் பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்