மின் கட்டணம் செலுத்த மே 6 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், மே மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-04-14 02:56 GMT
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், மே மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதள வழி முலம், கட்டணம் செலுத்தி மின் கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்