தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறிய பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Update: 2020-04-05 03:32 GMT

* தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

* 2006 சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராணி வெங்கடேசன் மற்றும் காவல்துறை டிஜிபி ஆக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்என் வெங்கடேசனுக்கு மகளாகப் பிறந்தவர் தான் பீலா ராஜேஷ்...... 

* தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் சொந்த ஊராக இருந்தாலும் பீலா ரஜேஷ் படித்தது வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான்......

* 1969 ல் பிறந்த இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார்

* 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரை காதல் திருமணம் செய்த பீலா ராஜேஷ்,  காதல் கணவரின் தொடர் ஊக்குவிப்பு காரணமாக இந்திய குடிமைப்பணிகள் தேர்வு எழுதி 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.

* ஆரம்ப காலகட்டத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்து வந்த இவர்,  இந்திய ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மத்திய ஜவுளித் துறையில் மத்திய அரசின் அதிகாரியாக பணியாற்றினார்......

* பின்னாளில் கணவர் தமிழகத்திற்கு தனது பணியை மாற்றிக் கொண்டதால்  தமிழக கேடரை  கேட்டுப் பெற்ற இவர் தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர் மீன்வளத் துறை இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார் .......

* கடந்த 2019 ஆம் ஆண்டு சுகாதார துறை செயலாளராக பொறுப்பேற்று இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மாற்றப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது...

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படுகிறார் பீலா ராஜேஷ்.

Tags:    

மேலும் செய்திகள்