சிறையில் கைதிகள் முகக்கவசங்கள் தயாரிப்பு: காவல்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-04-03 02:48 GMT
புழல் சிறையில் உள்ள கைதிகள் மூலம் ஒரு நாளைக்கு 31 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. சிறையில் உள்ள துணி தைக்கும் தொழிலகத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம், முக கவசம் தைக்கும் பணியில் 150  கைதிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழக சிறைகளில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகம் உள்பட காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பட்டுள்ளதாகவும், தரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த  முகக்கவசத்தின்  அடக்க விலை 10 ரூபாய் மட்டுமே என்றும்  சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்