பெங்களூவில் இருந்து தமிழக பகுதிக்கு நடந்து வந்த 250 பேர் - பரிசோதனை செய்து பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்த போலீஸார்

கெரோனா நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர், பெங்களூரில் இருந்து கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

Update: 2020-03-27 03:38 GMT
திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். கெரோனா நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், அங்குள்ள  தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர்,  பெங்களூரில் இருந்து கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நடந்து சென்ற சுமார் 250 பேரை தடுத்து நிறுத்திய போலீஸ் மற்றும் சுகாதாரத் துறையினர் அவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என சோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு, அனைவரும்  திருவண்ணாமலை, திருக்கோவிலூர், செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்