மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.;

Update: 2020-03-16 08:36 GMT
தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான  தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வேட்பு மனு பெறப்பட்டன. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேட்சையாக 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில், பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான சீனிவாசன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். சுயேட்சை வேட்பாளர்களை யாரும் முன்மொழியாததால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மார்ச் 18-ம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்