மெட்ரோ ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்

மெட்ரோ ரயில் பயணத்தின்போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்ல இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதித்துள்ளது.

Update: 2020-03-04 09:06 GMT
சென்னையில், போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் கீழ், தற்போது 42 கிலோ மீட்டர் தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளை கவர்வதற்காக, பயணத்தின்போது சைக்கிள்களை உடன் கொண்டு செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற பயணிகளுக்கு சிரமத்தை தராமல், ஸ்மார்ட் சைக்கிள் மற்றும் மடக்க கூடிய சைக்கிள்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

சைக்கிள் சிறியதாகவும், கையில் தூக்கி செல்லும் வசதியாகவும், பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்பது மெட்ரோ நிர்வாகத்தின் நிபந்தனையாகும். பெரிய சைக்கிள்களுக்கு அனுமதி கிடையாது என்பதும், கூடுதல் கட்டணம் செலுத்தி சிறப்பு வகுப்பில் மட்டுமே சைக்கிள்களை எடுத்துச் செல்லலாம் என்பது மெட்ரோ நிர்வாகத்தின் கூடுதல் நிபந்தனைகளாகும் 

இந்த திட்டம்  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக பாராட்டு குவிந்து வருகிறது ..   பயணிகள் வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு வரவும், ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று சேரவும் மாற்று வாகனத்துக்கு அல்லது ஆட்டோவுக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கவும்  இந்த திட்டம் உதவும். இருப்பினும் சைக்கிள்களை எடுத்து செல்வதற்கான கட்டணம் அதிகம் என்று கூறும்  பயணிகள் அதனை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர் 

Tags:    

மேலும் செய்திகள்