சுடுகாட்டுக்கான வழிப்பாதையை ஆக்கிரமித்த தனியார் - வழிப்பாதையை மீட்டு தரக்கோரி கிராமமக்கள் ஆவேசம்
கும்மிடிப்பூண்டி அருகே சுடுகாட்டு வழிப்பாதையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.;
கும்மிடிப்பூண்டி அருகே சுடுகாட்டு வழிப்பாதையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பூவலை கிராமத்தில் உள்ள இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கான சுடுகாட்டு வழிப்பாதை தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை மீட்டு தரக்கோரி, சடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பு கிராமமக்கள் திரண்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகளிடம் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.