OLX வலைதளத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் கைது

ஓ.எல்.எக்ஸ். இணைய தளத்தை தவறாக பயன்படுத்தி 200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்த கொள்ளையர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-02-29 10:04 GMT
பிரபல ஓ.எல்.எக்ஸ். இணைய தளத்தில், தங்களை ராணுவ வீரர்கள் என அறிமுகம் செய்த கும்பல், ராணுவ வாகனங்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறியது. இதற்கு, ஆசைப்பட்ட பலர், விளம்பரம் செய்த நபர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டதன் மூலம், பல கோடி ரூபாய்களை அந்தக் கும்பல் சுருட்டியது. இதுகுறித்து புகார் வந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் துனாவர் என்ற கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது. தமிழக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள துனாவர் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் பால் சிங் மற்றும் பச்சு சிங் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்