டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - சிவராஜ், விக்னேசுக்கு ஜாமீன் மறுப்பு
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராஜ் மற்றும் விக்னேசுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.;
டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட சிவராஜ் மற்றும் விக்னேசுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. தலா ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ஜாமீன் கோரி அவர்கள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார் அதனை ஏற்று இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்