போராட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி மீது வழக்கு
போராட்டத்தில் பங்கேற்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
போராட்டத்தில் பங்கேற்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.