"ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும்" - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் கருத்து

காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுளளார்.

Update: 2020-02-08 06:36 GMT
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு   கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைத்து வைத்திருப்பது,  ஜனநாயகத்திற்கு கைவிலங்கும், கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

 காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு உரிய சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துகள்  இருந்திட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

எனவே கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்