8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-01-29 09:55 GMT
இந்த ஆண்டு முதல்,  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்முறையாக பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒருமணிநேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளார். திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் ஒரு பாடம் வீதம் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வு நடத்தப்பட வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் கல்வியாளர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்