"மக்களின் கவனத்தை மாற்றும் சமூக வலைதளங்கள்" : உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு

ஆளை பிடித்து உயர வேண்டும் என்கிற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதெற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைபடுகிறது, எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார்.

Update: 2020-01-28 03:56 GMT
ஆளை பிடித்து உயர வேண்டும் என்கிற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதெற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைபடுகிறது, எனவும்  நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்துகொண்ட அவர், இதனை கூறினார். மேலும், ஒருவன் நோயின்றி வாழ்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது. உடற்பயிற்சி, விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும், சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர், கூரினார்.

Tags:    

மேலும் செய்திகள்