சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியலை இன்றே தாக்கல் செய்யுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவிட்ட சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆபாச கருத்து பதிவு செய்தவர்களின் பட்டியலை இன்றே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசாருக்கு, நீதிபதி ஆணையிட்டார்.