10 அடி குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி, சாதுரியமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட இளைஞர்கள்

விழுப்புரம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமியை அப்பகுதி இளைஞர்கள் சாதுரியமாக மீட்டுள்ளனர்.

Update: 2020-01-16 21:05 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில், சரோஜா என்பவர் வீடு கட்டி வருகிறார். அங்கு பில்லர் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டிய நிலையில், அதனை மூடாமல் வைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது மகள் கோபிணி, குழிக்குள் தவறி விழுந்தார். குழந்தையின் அழுகை சத்தம்கேட்ட, உறவினர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். குழி குறுகளாக இருந்ததால் உள்ளே இறங்கி மீட்க முடியாத நிலையில் அவர்கள், அருகிலேயே பொக்லைன் இயந்திரம் முலம் மற்றொரு குழியை வெட்டி, அதனுள் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோவை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது, வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்