தர்பார் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் - "வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ"

தர்பார் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் குறித்து, லைகா நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-01-12 09:45 GMT
ரஜினி  நடித்த தர்பார் திரைப்படம், கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்த திரைப்படத்தை யாரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என வாட்ஸ்அப் மூலமாக, மர்மநபர் ஒருவர் பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்