"ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணிகள்" - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்

சென்னை மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு இடையே ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணியை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-09 13:22 GMT
சென்னை  மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு இடையே ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணியை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மொத்தம் 2250 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்ணாடி இழை வடம் பதிக்கப்பட உள்ளது. இதற்காக 1224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்