கும்பகோணம் : ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற கல்லூரி மாணவி
கும்பகோணம் அருகே வில்லியவரம்பல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி துர்கா தேவி, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.;
கும்பகோணம் அருகே வில்லியவரம்பல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி துர்கா தேவி, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்ற அவர், ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தருவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.