தொடர் தடையால் களம் காண முடியாத சேவல்கள் - அனுமதி வழங்கிட கோரிக்கை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சேவல் சண்டைக்கு, அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2020-01-05 09:12 GMT
மன்னர்கள் காலத்திலேயே சண்டை கோழிகளை மோதவிடும் விளையாட்டு போட்டிகள் இருந்ததாக வரலாற்று செய்திகள் உள்ளன.  

இருப்பினும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் சண்டை கோழி போட்டிகள் பிரபலம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட சேவல் சண்டை போட்டிகள், சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி கடந்த 2009 ஆம் ஆண்டுடன் தடைவிதிக்கப்பட்டது. 

சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை வளர்ப்பவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தங்களது கோரிக்கையை பரிசீலித்து, சில பல நிபந்தனைகளுடன் நடப்பாண்டிலாவது போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பது சண்டை கோழி வளர்ப்போர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்