சென்னையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் பெரும் அவதி
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.;
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்ததால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.