மணக்காட்டூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை : பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஐயப்பன் கோயிலில், பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2020-01-01 11:35 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஐயப்பன் கோயிலில், பூக்குழி இறங்கி அய்யப்ப பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்டல பூஜையை ஒட்டி, அக்கோவிலில், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, சுவாமிக்கு, பால், பழம்,பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்