ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை : ரூ.81 லட்சம் பணம், 56 கிராம் தங்கம், 698 கிராம் வெள்ளி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் 81 லட்சம் ரூபாயை தாண்டியது.;
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் 81 லட்சம் ரூபாயை தாண்டியது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கடந்த 26 நாட்களில் பக்தர்கள் 81 லட்சத்து 68 ஆயிரத்து 89 ரூபாய் பணத்தை காணிக்கையாக செலுத்தினர். 56 கிராம் தங்கமும், ஆயிரத்து 698 கிராம் வெள்ளியும் உண்டியலில்
காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.