போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது
மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இலங்கை குடியுரிமை பெற்ற ராபின்ராபட் என்பவர் கடந்த 1983 ஆண்டு முதல் ராமநாதபுரம் அகதிகள் முகாமில் தங்கி வருகிறார். கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராபின்ராபட் , ஆதார் அட்டை பெற்று தான் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில், குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் வசமாக சிக்கிய ராபின் மீது போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.