சூடான் தொழிற்சாலை தீ விபத்து : உயிரிழந்த இருவரின் உடல் தமிழகம் வந்து சேர்ந்தது
சூடான் நாட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.;
சூடான் நாட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 17 ஆம் தேதி வெங்கடாசலம் என்பவரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊரான காரைக்கால் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை விருத்தாசலத்தை சேர்ந்த ஜெயகுமார், நாகப்பட்டினத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோரது உடல்கள், விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டு செல்லபட்டது.