"போக்குவரத்து போலீஸ் என கூறி கமிஷனர் அலுவலகம் சென்ற நபர் - போலி அடையாள அட்டையுடன் வந்தது தெரிந்ததால் கைது"

சென்னையில் போக்குவரத்து போலீஸ் என கூறி போலி அடையாள அட்டையுடன் உயர் அதிகாரியை சந்தித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-12-16 18:53 GMT
சாம் ஜெபராஜ் என்பவர் சாலை பாதுகாப்பு போலீஸ் என கூறி அடையாள அட்டையை காட்டிவிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். உயர் அதிகாரியை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த போது அவரது அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததில் அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி விழாவிற்காக காவல் ஆணையரை அழைத்து வருவதாக உறுதியளித்து கல்லூரி முதல்வர் ஒருவரையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளது தெரியவந்தது. போலி அடையாள அட்டையுடன் வந்த அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்