மலைகிராமங்களில் கடும் பனிமூட்டம் : வாகனங்கள் இயக்குவதில் ஓட்டுநர்கள் சிரமம்
தேனி மாவட்டம் வருசநாடு மலைகிராமங்களில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.;
தேனி மாவட்டம் வருசநாடு மலைகிராமங்களில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது. முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி வாகனங்கள் இயக்கப்பட்டன. மூல வைகை ஆற்றில் நிலவிய பனிமூட்டம், பார்ப்பதற்கு மிகவும் ரம்மியாக இருந்தது.