"பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-12-14 11:23 GMT
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் குற்ற வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாலியல் குற்றங்களை தடுக்க ஆந்திராவை போல், தமிழகத்திலும் சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடலூரில் கருவுற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்