சென்னையில் 164 ஆண்டு பழமையான நீராவி ரயில் இயக்கம்

164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி ரயில், சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இன்று இயக்கப்பட்டது.

Update: 2019-12-14 08:15 GMT
கடந்த 1855ஆம் ஆண்டு தயாரன இந்த நீராவி ரயில், இந்திய ரயில்வேயில் 55 ஆண்டுகள் ஓடியது. அதற்கு பின் தெற்கு ரயில்வேக்கு கொண்டு வரப்பட்ட இந்த ரயில், முக்கிய பண்டிகை நாட்களில் மட்டும் இயங்குவது வழக்கம். 
இந்நிலையில் இந்த ரயில், பயணிகளுக்காக இன்று இரண்டு முறை சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது. இதை ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை, 35 கி.மீ., வேகத்தில் ஓட்டுனர் இயக்கினார். ரயிலில் 35 வெளிநாட்டு பயணிகள், 5 இந்திய பயணிகள் என 40 பேர் பயணம் செய்தனர். புகையை கக்கி கொண்டு, பழைய ஹாரன் சப்தத்துடன் புறப்பட்டு ஓடிய ரயிலை, பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்